மூன்று நாள் ஆன்மிகப் பயிலரங்கம் !

இறைவனின் திருப்பெயரால்…..

நம்பிக்கையில் உறுதி! தொழுகையில் வெற்றி!


(மூன்று நாள் ஆன்மிகப் பயிலரங்கம்) 

வடிவமைத்து நடத்துபவர்: கவுன்ஸலர் மன்சூர் அவர்கள்

(மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர், நூலாசிரியர்)

I நம்பிக்கையில் உறுதி!

இன்றைய முஸ்லிம் இளைஞர்களுக்கு - தம் இறை நம்பிக்கையிலேயே சந்தேகங்கள். இறைவன் ஒருவன் இருப்பதென்பது உண்மை தானா? இறைவன் என்று ஒருவன் இருந்தால் இங்கு ஏன் இவ்வளவு குழப்பங்கள்? மரணத்துக்குப் பின் வாழ்க்கை ஒன்று உள்ளது என்பதை எப்படி நம்புவது? இஸ்லாம் என்றாலே ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள்? இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்தல் என்பது இன்றைய நடைமுறையில் சாத்தியம் தானா? - என்பன போன்ற கேள்விகளுக்கான இளைஞர்களின் சந்தேகங்களை விவாதிக்கின்ற சிந்தனைக் களமே - நம்பிக்கையில் உறுதி ஆன்மிகப் பயிலரங்கம்.



II தொழுகையில் வெற்றி!

தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல் என்பது நபிமொழி! மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வியே தொழுகை குறித்துத்தான் என்பதும் நபிமொழியே! தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாத்தில்? தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்! – இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான். தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்? - கேள்வி பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் அளிக்கப்படும் ஆன்மிகப் பயிற்சியே - தொழுகையில் வெற்றி!

ஆன்மிகப் பயிலரங்கங்களில் கலந்து கொண்டவர்களின் கருத்துகள்

"இதைப் போன்ற ஒரு பயிலரங்கத்தில் நாங்கள் கலந்து கொண்டது கிடையாது. இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஆர்வமானதாகவும், ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருந்தது. இதைப்போல், எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் பயிற்சி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய எதிர்காலத்துக்கு உதவும் வகையில் இருந்தது. இடைவேளைக்குப் பிறகு அடுத்து தாங்கள் என்ன கூறுவீர்கள் என தெரிந்து கொள்ளும் வகையில் ஆர்வமுடன் இருந்தோம். மீண்டும் எங்கள் கல்லூரிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்."

"ஒரு மனிதன் தன்னை இதைவிட மிகவும் அழகாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு மிகவும் நன்றி."

“இப்பயிலரங்கம் மூலம் தொழுகையுடன் தொடர்புள்ள பல விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். அரபி மொழியின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொண்டேன். தொழுகையின் மூலம் அனைத்தையும் பெற முடியும் என்பதையும், தொழுகையினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும், மேலும் பெண்களுக்காக வாழ்க்கையில் வெற்றி பெற நிதானம், பொறுமை ஆகியவை தேவை என்பதையும் கற்றுக்கொண்டோம்”.

நீங்கள் பயிற்றுவித்த விதம் எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு மிக அழகாக கற்றுக் கொடுத்தீர்கள்.

நீங்கள் சொன்ன கருத்துக்கள் புதிதாக இருந்தது. இது போன்று ஒரு பயிலரங்கத்தைத் தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் இவ்வளவு நாட்கள் தொழுகையை லேசாக நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் தொழுகையை பற்றி விரிவாய் உணர்ந்தேன். தொழுகையை இனி விட மாட்டேன்.

மேலும் விபரங்களுக்கு:

மின்னஞ்சல்: samansoorali@gmail.com

இணைய தளம்: http://counselormansoor.blogspot.in/

Comments

  1. அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

    (உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

    ReplyDelete

Post a Comment