உனக்குள் ஒரு சுரங்கம்! - பயிலரங்கம்


இறைவனின் திருப்பெயரால்…..

கல்லூரி மாணவர் மாணவியருக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 

மூன்று நாள் பயிலரங்கம் ஒன்றை அறிமுகப் படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்! உனக்குள் ஒரு சுரங்கம்!வடிவமைத்து நடத்துபவர்: நீடூர் எஸ்.ஏ. மன்சூர் அலி

(மாணவர் நல ஆலோசகர், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)இப்பயிலரங்கத்தின் சிறப்பு அம்சங்கள் இதோ!1 மனித வள மேம்பாடு  

மனிதர்களுக்குள் புதைந்து கிடக்கின்ற ஆற்றல்களையும், திறமைகளையும் (hidden talents) வளர்த்தெடுக்க உதவும் பயிற்சியே மனித வள மேம்பாட்டுப் பயிற்சி ஆகும். தான் யார்? தனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் என்னென்ன? என்பதை மாணவ மாணவியர்க்கு உணர்த்துகின்ற இப்பயிற்சி, எமது பயிலரங்கத்தின் மிக முக்கியமான அம்சம் ஆகும்!


2 உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாள்தல் 

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து இன்றைய நவீன உலகில் – மிக அதிகமாக விவாதிக்கப் படுகிறது. ஒரு நிர்வாகத்தின் பல் வேறு மட்டங்களில் பணியாற்றக் கூடியவர்களுக்கு உணர்ச்சித் திறன் பயிற்சி மிக அவசியம் ஆகும். உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மிகத் திறமையாகக் கையாள்வது எப்படி எனும் பயிற்சி இப்பயிலரங்கத்தின் இன்னொரு சிறப்பம்சம்.


3 தனி மனித தலைமைத்துவம்  

தலைமைத்துவம் என்பது ஒருவர் தனது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்க வைத்து அவர்களை ஆர்வத்துடன் செயல்பட வைத்திடும் திறன் என்று சொல்லலாம் (capacity to influence others). தனி மனித தலைமைத்துவம் குறித்த ஒரு வித்தியாசமான பயிற்சியும் இப்பயிலரங்கத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று.


4 திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை  

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளில் பலர் தங்களின் திருமண வாழ்வு குறித்து குழப்பமான மன நிலையில் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு பின்னர் கைசேதப் படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கின்ற இளைய தலைமுறையினருக்கு மிகச் சிறப்பாக வழிகாட்டும் பயிற்சியும் எமது பயிலரங்கத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.


5 தேர்வுகளில் சாதனை செய் 

நம்மில் பல மாணவ மாணவியர்க்கு - படிப்பில் கவனக் குறைவு, நினைவாற்றலில் குறை, நேரத்தைத் திட்டமிட இயலாமை, தேர்வு பயம், மன அழுத்தம், தோல்வி மனப்பான்மை - இவை போன்ற மாணவர்களின் பிரச்னைகளை அலசி, மாணவ மாணவியர் தேர்வுகளை ஆர்வத்துடன் எதிர்கொள்வதற்காக - ஊக்கப்படுத்திடும் (Motivation) பயிற்சியும் எமது பயிலரங்கத்தின் ஒரு சிறப்பம்சமே.


இனிய தமிழில் சிந்தனையைத் தூண்டும் கேள்வி பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் நடத்தப்படும் இப்பயிலரங்கம் – ஒரு பயனுள்ள அனுபவம்!

Comments