தேர்வுகளில் சாதனை செய்! - மாணவர்கள் சிலரின் கருத்துக்கள்!

மயிலாடுதுறை ஏ ஆர் சி காமாட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தேர்வுகளில் சாதனை செய் - சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலரின் கருத்துக்கள் இதோ:


“இந்த நிகழ்ச்சி இந்த நேரத்திலிருந்து என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும் என்று மிகவும் நம்புகிறேன். பொதுவாக நான் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது தூங்கி விடுவேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆற்றிய சொற்பொழிவுகளைக் கண்டு வியந்தேன். தூக்கம் வராமல் கவனமாகக் கேட்ட சொற்பொழிவு இது தான். அவர் கூறிய ஒவ்வொரு கருத்தும், அறிவுரையும் மதிப்பிட முடியாதவை. அவர் ஆற்றிய சொற்பொழிவினால் தான் என்னுடைய குறைகளையும், நிறைகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. என்னைப் போன்று எல்லா மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.” - ஹரி பிரசாந்த்    

***

நீங்கள் நடத்திய இந்த வகுப்பு ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருந்தது. நீங்கள் கூறிய அந்த நேரம் வைத்துப் படிக்கும் முறை மிகவும் பயன்பாடாக இருந்தது. நீங்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்ததற்கு நன்றி. நீங்கள் இன்னும் பல பள்ளிகளுக்குச் சென்று இம்முக்கியமான பயன்பாடான செய்திகளைக் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். - ராஜ் குமார்

***

இந்த நிகழ்ச்சி எனக்கு படிப்பதற்கு ஊக்கம் அளித்தது. எப்படி படிப்பது, எந்த நேரத்தில் படிப்பது, என்பதை புரிந்து கொள்ள உதவியது. தயவு செய்து இந்த நிகழ்ச்சியை எல்லா பள்ளியிலும் சொல்லித் தர வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். - செந்தில் 

***

நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்குக் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும். நீங்கள் சொன்னது அனைத்தையும் என் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி நான் வெற்றி பெறுவேன். நீங்கள் நடத்திய நிகழ்ச்சியின் மூலமாக நீண்ட காலமாக இருந்த சந்தேகம் தெளிவு பெற்றது. - காயத்ரி

***

மூன்று மணி நேரம் Memory Class என்றுச் சொன்னார்கள். கேட்ட உடன் எப்படி உட்காரப் போகிறோம் என்று நினைத்தோம். ஆனால் மூன்று மணி நேரம்  மூன்று நிமிடம் போல் ஆகிவிட்டது. Goal பற்றி மிக அழகாகச் சொன்னீர்கள். என்னுடைய Goal ஐ நான் achieve பண்ணுவேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது. - திவ்யா. 

***

இன்று நடந்த நிகழ்ச்சி எனக்கு வாழ்க்கையில் திருப்பத்தைத் தரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல தகவல்களை அறிந்து கொண்டேன். இந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நீங்கள் கூறிய கருத்தும் கதையும் மாற்றத்தை ஏற்படுத்தியது. - ரம்யா

***

உங்களின் இந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்கள் சொல்ல வந்த கருத்துக்களை கதைகள் மூலம் கூறி எங்களுக்கு எளிதில் புரிய வைத்தீர்கள். எங்களுக்கு அதிகமான தேர்வு பயத்தைப் போக்குவது எப்படி என்று கூறினீர்கள். - செந்தில் குமார்

***

என் குறைகளை நான் தெரிந்து கொள்ள நீங்கள் உதவியிருக்கிறீர்கள். அதை நான் சரி செய்வதற்கு நீங்கள் உதவியிருக்கிறீர்கள். நன்றி. - ஒரு மாணவர்

***

இது ஒரு நல்ல experience. என்னுடைய ப்ளஸ் 2 வாழ்க்கையில் இது ஒரு பெரிய gift. - மனோஹரி    

***

குறிப்பு: இந்த நிகழ்ச்சி - சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!!





Comments